உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 21 February 2014

வெற்றியின் இரகசியம்

வெட்டப்பட்ட மரம் கூட 
இன்றும் தழைக்கிறது,

தோழா! 

நீ தோற்றுவிட்டாய் என்று 
எண்ணி ஏன் முயற்சிக்க மறுக்கிறாய்,

காயப்பட்டவனுக்கு மட்டுமே 
அதன் வலிதெரியும்,

நீ அந்தக் காயமாக இல்லாமல் 
அதற்க்கு மருந்தாக இரு,

உன்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் 
என்று நினைக்காதே!

உன் கைவிலங்கினை உடைத்து 
உன்னைச் சுதந்திரப்பறவையாக 
பறக்கவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்!

நீ எதையும் தூரம் என்று நினைக்காதே 
அவ்வாருநினைத்தால் உன் அருகில் 
இருப்பவைகூட  தூரம்தான்,

இருபக்கம் இருந்தால்தான் 
நாணையத்திற்கு மதிப்பு -அதுபோல் 

நீ கோழையாய் 
ஒருபக்க நாணையமாய்
இல்லாமல் வீரனாய் 
இருபக்க நாணையமாய் மாறு,

ஓயாமல் (அயராது) முயர்ச்சிப்பவனுக்கு 
மட்டுமே வெற்றி கிட்டும் .........

==========================================
பிழை இருந்தாலும் தவறுகள் இருந்தாலும் 
உங்கள் கருத்துக்களை தயங்காமல் தெரிவிக்கவும் 
அடியேன் அதை திருத்திக்கொள்கிறேன்.
==========================================
என்றும் அன்புடன் 
சேர்ந்தைபாபு.த

உறங்கிய ஜீவன்

விழியோரம் வழியும் 
துளிநீரும் சொல்கிறது 
என் சோகம் என்னவென்று,

என் கண்ணீர் துளிகளை 
அணைகட்டி அதில் துள்ளி 
குதித்து நீராடுகிறாய் -என் 
சோகம் என்னவென்று தெரியாமல்,

நான் காற்றாக வர ஆசைதான் 
உன் சுவாச மூச்சாக 
இருப்பேன் என்பதற்காக,

காதல் என்னும் கல்வெட்டில் 
உன் நினைவால் இன்று -என்பெயரும் 
பொறிக்கப்பட்டுள்ளது,

பெண்ணே! நேசிக்க நேரம் கிடைத்த 
உனக்கு சிறிது யோசிக்க நேரம் 
இல்லாமல் போனதோ!

உனக்காக உயிரையும் கொடுப்பேன் 
என்பதற்காக- என் உயிரையும் எடுத்துவிட்டாய் 
உன் பொய்யான காதலை சொல்லி,

அடுத்த பிறவி இருந்தால் 
தினம்தினம் வீர மரணம் அடையவேண்டும் 
உன் விரல் நிகமக பிறந்து 
உன் இதழ்களில் சிக்கி ....

காதல் கைதியாய் என்னை சிறைபிடித்து
அதில் ஆயுள் கைதியாய் என்னை 
இட்டு வைத்தாய் ,

நான் இறந்து விட்டேன் 
என்று தெரியுமோ? 

இன்று என் கல்லறையில் 
பூக்கப்பட்ட பூக்களாய் 
பிறந்துள்ளேன்,

இன்று உன்தோலில் கிடக்கிறேன் 
மணமாலையாய் .....

நீ ஆனந்தத்தில் சிந்தும் 
கண்ணீர் துளிகள் கூட 
என்மீது விழுகிறது ,

ஒவ்வொரு துளியும் சொல்கிறது 
எனது ஏமாற்றத்தை......

என் ஜீவன் கேட்கிறது 
எனக்காக ஒருதுளி கண்ணீர் 
சிந்து என் ஆன்மா சாந்தி அடையும்,

என்னையும் மறந்து இன்னும் 
உறங்குகிறேன் உன் நினைவோடு 
அந்த கல்லறையில்...


உறங்கிய ஜீவன்....

என்றும் அன்புடன் 
சேர்ந்தை பாபு .த

நீ வருவாய் என

பறக்க நினைத்த 
நான்....
சிறகில்லாமல் 
தவிக்கிறேன்,

உதவ நினைத்த 
நான்.....
கரங்கள் இல்லாமல் 
கலங்குகிறேன்,

மிதக்க நினைத்த 
நான்....
துடுப்பில்லாமல் 
துடிக்கிறேன்,

பேச நினைத்த 
நான்....
வார்த்தை வராமல் 
தவிக்கிறேன்,

வர நினைத்த
நான்....
வழிதெரியாமல் 
நிற்கிறேன்,

வாழ நினைத்த 
நான்....(இன்று)
நீ இல்லாமல் 
இருக்கிறேன்.....

உன் நினைவாளே பெண்ணே!

நீ வருவாய் என...........

என்றும் அன்புடன் 
சேர்ந்தை பாபு.த

அவர்களுக்கு பிடித்தது நான் கொடுத்த தேனீர் மட்டுமே

வானைக் கூரைகட்டி 
வானிலவை விளக்காக்கி 
விண்மீன்களை தோரணைகட்டி
காத்திருக்கும் கன்னியரின் 
தவிப்பு இது !

ஆளா வெளஞ்சு நின்னு 
ஆறேழு வருசமாச்சு 
அத்த மகன் வருவானு -நெனப்ப 
அள்ளித்தான் முடுஞ்சாசு ,

பருவம் வெளஞ்சு இருக்க 
பாவிமகன் அறுவடைக்கு 
வருவானோ!

என் தோழி 
குழந்தை கண்டு 
குமரி நான் 
குமுறி அழுதேனே,

மாலையிட தோளுந்தான் 
மசமசன்னு அரிக்குதையா 
மஞ்சள் குங்குமமிட 
நெற்றியுந்தான் விரும்புதையா,

பட்டினி விரதமிருந்து 
பச்சைக்கிளி தவமிருந்தேன் 
பட்டணத்து மாமன் மகன் 
பச்சைக்கொடி காட்டுவாரோ!

ஏழை பெத்த புள்ள 
ஏக்கந்தான் நெஞ்சுக்குள்ள 
ஆசை மனசுக்குள்ள 
அச்சாரம் போடுவாரோ!

கரிச்சட்டி வெலக்கி 
கைரேகை தேஞ்சாச்சு
கருவேலம் விறகு சுமந்து 
தலையுந்தான் வலுச்சாச்சு,

எண்ணெய் தேய்த்து 
தலை வாரி 
தலைமேல மலர் சூடி 
கையிலதான் தேனீர் கொண்டு 

குடித்தார் எல்லாம் 
என்னை பிடிக்கும் என்று 
நினைத்திருந்தேன் -பிடித்தது 
நான் கொடுத்த தேனீர் மட்டுமே!

உன் வருகையை  சுமந்து 
வாசல் வந்து காத்திருக்கேன் 
என்னை கண்ணகியாய் அழைக்கா விட்டாலும் 
மாதவியாய் என்னை கூட்டிச் செல்லட ....

பருவ பெண்ணின் ஏக்கம் ....

===============================================================
இது என் கற்பனைக்கு எட்டியதை படைத்துள்ளேன்
தவறுகள் இருந்தால் கூறுங்கள் அடியேன் திருத்திக்கொள்கிறேன் ...
===============================================================

என்றும் அன்புடன் 
சேர்ந்தை பாபு.த

Wednesday, 19 February 2014

குப்பைவண்டியில் பூக்கள்

வாடிய மொட்டுக்களை
கேள் ,
அதோ
அது வாழ்த்த
கதையைச் சொல்லும் ,

பசுஞ்செடியில்
குலுங்கிய
பூக்களாய்
இருந்த
எங்களை
கிள்ளி எடுத்து
விட்டார்கள்,

நானோ
அவளின்
கூந்தலில்,

என் சகோதரியோ
அவள் வீட்டு
பூஜை
அறையில்,

எனது
சகோதரனோ
அவளின்
மழலையின்
கையில்,

எங்கள்
மொத்த உயிரோ
அவளின் மாமியார்
கையில்,

வாடியதும்
தூக்கி எரிந்து
விட்டால்
அவள் வீட்டு
குப்பைக்கூடையில்
நான்,

வதங்கியதும்
அள்ளி கொட்டிவிட்டால்
அவள் வீட்டு
மொட்டை மாடியில்
என் சகோதரி,

குழந்தை மலம்
கழித்து விட்டான்
அவள் வீட்டார
சாக்கடையில்
என் சகோதரன்,

மாமியார்
பெயர்த்து
எரிந்து விட்டாள்
அப்பூக்கள் அல்லாத
செடியோ எங்கள்
உயிரோ
குப்பைவண்டியில் ...

போறோம்......வரமாட்டோம் ....

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

அன்றும் இன்றும்

உதிரத்தை 
சிந்தி 
நமக்கு 
சுதந்திரம் 
வாங்கித்தந்த 
நல் உள்ளங்களை 
மறந்தோம்,

நாகரீகம் 
உருவாகிய 
நதிக்கரைகளை
எல்லாம் 
சாக்கடை 
ஆக்கினோம்,

விஞ்ஞானம் 
என்ற பெயரில் 
பல விந்தைகள் 
புரிந்தோம்,

வித்தே
இல்லாத 
பல பழங்களை
உண்கின்றோம் ,

ஆனால் 
உண்ண
களி கிடைத்த 
காலம் 
போய்,

இன்று உயிர் 
பிரியும் 
கலிகாலம் 
நம் 
அருகாமையில் ....


என்றும் அன்புடன் 
சேர்ந்தைபாபு.த

என்னை மூப்பாக்கி போனவளே!


http://eluthu.com/login/nanbarkal/Sernthai_Babu.html

அத்தியும்தான் பழுத்தாச்சு 

அந்தியும்தான் பூத்தாச்சு 
கொத்தித்திங்க பழம் இருக்க 
குருவி நீ எங்க போனையடி!

மூணுரெண்டு வருசமாச்சு காதலிச்சு 

மூப்புந்தா வந்து சேர்ந்தாச்சு 
கறுத்த மச்சான் நானிருக்க 
சொக்கத்தங்கம் நீ போனதெங்கே!

விவசாயி பெத்த மகன் 

விருச்சம்ம வளர்ந்து நிக்க 
உன்ன உன் தாய்மாமன் பொண்ணுகேக்க
நீ பொற்கிளியா பறந்தவளே!

நாள ஏழாள பெருக்கி 

என் வயசுந்தான் போகுதடி 
பாவிமக  உன் நெனப்பால  
பைத்தியமா ஆனேனடி!

அரசாங்க மாப்பிள்ள வேணுமுன்னு 

உன் ஆத்தா அப்பன் சொன்னங்கன்னு 
பாவி புள்ள என்னத்தான
பாதியில தூக்கி எருஞ்சவளே!

உனக்காக காத்திருந்து 

காலமெல்லாம் போச்சுதடி 
இன்று காலாவதி ஆனா என்ன 
கண்டாரும் கேப்பாரோ!

என்ன நானும் சொல்ல 

என்னவள் இருந்த நெஞ்ச 
களையிழந்த மாடத்தில 
காக்கா குருவி எச்சமிட!

சோகங்கள சொல்லி அழ

சொந்தமுனு யாருமில்ல 
அன்னம் தண்ணி உண்ணாத  
அடைக்கோழி நானானே!

சொல்ல சொல்ல சோகம்தான் 

சொன்ன சோகம் பாதிதான் 
பாதியில பாவிநான் 
நான் இன்று நானில்லை உன்னாலே!

இன்றும் உன் நினைவுடன் 


என்றும் அன்புடன் 

சேர்ந்தை பாபு.த