உங்கள் கருத்துகள்
இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.
என்னைப்பற்றி
Monday, 21 October 2013
உன் காதல் கருவறை
காதல் கண்ணீர் துளிகளால்
வரையப்படும் காவியம்தான்
காதல்!
இதய கருவறையில் சிறை வைக்கும்
உன் நினைவுகள் தான்
காதல்!
பார்க்க துடிக்கும் கண்களுக்கு
புலப்படாத அதிசயம் தான்
காதல்!
முழுமதி கொண்டு வடிக்கப்பட்ட
சிற்பம் தான்
காதல்!
அழகுக்கு வேருவழிகண்ட
மொழிதான்
காதல்!
சிறை வைத்த பின்னும் வலம்வரும்
உன் நினைவுகள் தான்
காதல்!
இரணத்தில் மயில் இறகுகொண்டு
வருடும் சுகம்தான்
காதல்!
என்னதான் சொல்ல காதல்
வந்தவருக்கே தெரியும்
ஓர் இனம் புரியாத சுகம் என்பதே!
காதல்!
என்றும் அன்புடன்
சே.பா
Friday, 18 October 2013
கருவறையில் கல்லறையா?
தாயே!
நான் என்ன பவம்
செய்தேன்,
தவறு செய்தவள் நீ
தண்டனையோ எனக்கு,
இருள் சூழ்ந்த
கருவரெயில் நான்
விலை மாதுவாய்
கட்டிலில் நீ
நான் கண் திறக்க
அசை படுகிறேன்
நீயோ காசுக்கு
ஆசைப்படுகிறாய்
மாதங்கள் மூன்று
ஆனதுமே நீ
முடிவெடுத்தாய்
உன் கருவறையிலேயே
எனக்கு கல்லறை எழுப்ப
தாயே! தயங்காதே
எனது முடிவில் தான்
மீண்டும் உனது தொடக்கம்
நான் சிந்தும் ஒருதுளி
கண்ணீரைக் கூட இந்த
உலகம் காணாது
நான் உள்ளுக்குள் அல்லவா
அழுதுகொண்டுஇருக்கிறேன்?
உறங்கிய படி
உன் கருவறையில்
கல்லறை தேடும்
குழந்தையாய் நான்.
தொடக்கம் இல்லாத முடிவுடன்
சேர்ந்தை_பாபு.த
சேர்ந்தை_பாபு.த
"பாட்டி"
ஈன்றெடுத்த
அன்னையாய்
என் தந்தைக்கு
தாயாய் நீ
என் அன்னைக்கு
அத்தையை நீ
எனக்கோ பாட்டியை நீ (அப்பத்தா),
கூன் விழுந்தும்
குமரியாய் நீ
நீ குத்தும் உலக்கை சத்தம்
குமரியும் நடுநடுங்க,
ஏதோ! தேடுகிறாய்
மூன்று காலில்
ஒருகாலை காணலையே,
பேராண்டி இங்க வாபனு (தளர்ந்த
குரலுடன்)
பாட்டியோட கம்ப (கொம்பு) பாருப்பானு
உன் அனுபவத்தின் வயதை
ஆயுளில் கழித்தவள் நீ,
தலைமுறை தழைக்க
தன்னை உரமாய் இந்த
பூமிக்கு இட்டவள் நீ
கதை கேட்டு உணவு உன்ன
உன் மடியில் நான் தூங்க
ஆசைகள் நூறு,
ஆனால் இன்று நீ இல்லை
உன் நினைவுகள் மட்டும்
என்னுள் தீர வண்ணம்
புதைந்து கிடக்கிறது,
என்று உன் நினைவுடன்
உன் பேரன்
சேர்ந்தை_பாபு,த
"காதலன்"
என்னவனே!
காதல் பிறவி தந்து
காதலி என்னும் பதவி தந்தாய்,
உனக்காக பிறந்தவள் நான்
என் இரண்டாம் உலகம் நீ,
காதல் அன்பு பார்வையால்
என்னை கவிழ்த்தவனே,
என் உயிரும் உருகி போனதே
உன் ஞாபகத்தால்,
பிரிவு வேதனைகளை தரும் என்பதால்
சோதனைகளை சுமந்துகொண்டு இருக்கிறேன்,
என்னவனே!
நான் உன் நினைவால் வாடியதை
என் தோழிகள் கூட அறிந்திலார்,
என் வீட்டு கண்ணாடி
தலையணை, படிக்கட்டு ,
மொட்டைமாடி, ஜன்னல் கம்பி
இவைகளுக்கு தெரியும்
என் துயரம் என்னவென்று,
நான் வாழ்வது உனக்காக
பிரிவுகளை கடந்தும் வாழும்
நம் காதல் வாழ்க்கைக்காக,
அன்பு காதலி!
"கண்ணீர் துளிகள்"
இலையில் தவழும் பனித்துளியாய் என்
இமையில் தவழ்கிறது என்
கண்ணீர் துளிகள்,
வெள்ளம் பெருக்கெடுத்து
உடையும் கம்மாய் போல்
சோகத்தில் என் விழிக்கிடங்கில்
பெருக்கெடுத்து ஓடுகிறது,
என் துன்பத்தின் வெளிப்பாட்டாய்
என் கண்ணீர்த்துளி சோகமாய்
என் சந்தோசத்தின் வெளிப்பாட்டாய்
என் கண்ணீர்த்துளி ஆனந்தமாய்
அடடா!
ருசி இல்லாத இவன் வாழ்கையில்
கரிப்பு ருசி தந்தாய்
என் இதழோரம்,
"தவிப்பு"
மாதர் தம் மடியில்
மழலை தவள ஆசை,
கழனியில் ஏர் உளும்
உழவனுக்கோ சிந்திய
வேர்வை துளிகள்
நென்மணியாய் வர தவிப்பு,
மைக்கோல் சிந்திய
எழுத்துக்கள்
நூலாய் வர எழுத்தாளன்
தவிப்பு,
தேர்வின் முடிவிற்கு
மனமுவந்த மாணவனின்
தவிப்பு,
கருவறை விட்டு
பிரிந்த கண்மணியை
காண தவிப்பு,
காதலியே!
உன்னை விட்டு
பிரிந்த நான் மட்டும்
காலம் எல்லாம் தவிப்பு,
ஏங்கி தவிக்கும்
உள்ளத்திற்கு
ஏமாற்றம் தான் பரிசு
என்றால்
எழுதி விடுங்கள்
வாழ்க்கையில் ஏங்கி
தவித்தவர்கள்
இமயம் தொட்டார்கள்
என்று,
நாளை எழுதுவோம்
சரித்திரத்திற்கு
தவிப்பும் ஒரு
காரணம் என்று.
என்றும் அன்புடன்
சேர்ந்தை_பாபு.த
“புள்ளினங்கள்”
அட
மானிடா! ,
நீ
செய்த தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
வனங்களை
நீ அழித்து விட்டு
வானுயர
கோபுரம் கட்டி அதில்
மின்னணு
சாதனங்களுடன்
மின்னலாய் நீ வசிக்கிறாய் !
நானோ
மின்கம்பங்களில்
கூடு
கட்டி சுட்டெரிக்கும்
வெயிலில்
நான் வாடுகிறேன்,
இந்த
பூமியை நீ அவகரித்து கொண்டாய்
இது
எங்களுக்கும் சொந்தம்
என்பதை
மறந்து விட்டாயோ ?
நாங்கள்
வாய் பேச தெரியாத
உயிரினம்
என்பதால் நீ கண்டு கொள்ளவில்லை
உன்னை
கேட்க இவ்வுலகில் வேறு
யாரும்
இல்லை என்ற ஆணவத்தால் ஆடுகிறாய்,
அழிவு
எங்களுக்கு மட்டும் அல்ல
இவ்வுலகில்
உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தான்
உன்
வசதிக்காக தொலைத்தொடர்பு
கம்பங்கள்
அமைத்தாய்,
கதிர்
வீச்சு தாங்காமல்
காலாவதி
ஆன பொருளாய்
இன்று
மடிந்து கிடக்கிறோம்
சிட்டு
குருவி இனமாய்,
மரக்கிளையில்
கூடுகட்டி
மனம்
மகிழ வாழ்ந்தோம்
நீயோ
நாங்கள் இருந்த மரத்தை வெட்டி
உன்
வீட்டு வாசல் கதவு செய்தாய்,
இன்று
வீடே இல்லாமல் இருக்கிறோம்
சிந்தனை
செய் மானிடா
இவ்வுலகம்
எங்களுக்கும் சொந்தம் என்பதை..........
……….மரண போராட்டத்தில் வாழ்கிறோம்……….
அன்புடன் புள்ளினம்
சேர்ந்தை_பாபு.த
“நினைவுகளுடன்”
பொய்களாய்
சித்தறிக்கிறேன்
அதில் அழகு
ஒளிந்திருப்பதால்>
உன்னை வர்ணிக்க
வார்த்தைகள்
தேடுகிறேன்
இருக்கும்
உயிர்மெய்
எழுத்துகள்
பற்றவில்லை>
மஞ்சள்
வெயில்கொண்டு
மாலை கட்ட ஆசை
உன்னை மனம்
மணக்க>
ஏனடி பெண்ணே!
இதய
சுவர்களுக்கு சாயம் பூசுகிறாய்
கவலையின்
நிறமாய் இரத்தத்தில்>
என்
வாழ்க்கைக்கு
புது யுகம்
தந்தவள் நீ!
தாய்
மரணத்திற்கு கூட
கண்ணீர்
சிந்தாதவன்
உன் பிரிவு
தாங்காமல்
மரணிக்க
துணிந்துவிட்டான்
சோக மழைக்குள்
சிக்கி தவிக்கிறேன்
ஆனந்தமான
வாழ்க்கைக்கு
அஸ்திவாரம் நீ
இடுவாய்
பகல் பொழுது நெடுந்தூரமாய்
இரவு பொழுது சிறுகணமாய்
அமைந்தது ஏனோ
என்னவளே!
என் உணர்வுகளை
புரிந்து கொண்டு
புது வாழ்வுக்கு வித்திடுவாயோ!
என்றும் உன் நினைவுகளுடன்.
சேர்ந்தை---பாபு.த
Subscribe to:
Posts (Atom)










