உங்கள் கருத்துகள்
இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.
என்னைப்பற்றி
Monday, 10 November 2014
Friday, 21 February 2014
வெற்றியின் இரகசியம்
வெட்டப்பட்ட மரம் கூட
இன்றும் தழைக்கிறது,
தோழா!
நீ தோற்றுவிட்டாய் என்று
எண்ணி ஏன் முயற்சிக்க மறுக்கிறாய்,
காயப்பட்டவனுக்கு மட்டுமே
அதன் வலிதெரியும்,
நீ அந்தக் காயமாக இல்லாமல்
அதற்க்கு மருந்தாக இரு,
உன்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்
என்று நினைக்காதே!
உன் கைவிலங்கினை உடைத்து
உன்னைச் சுதந்திரப்பறவையாக
பறக்கவிட்டார்கள் என்று எண்ணிக்கொள்!
நீ எதையும் தூரம் என்று நினைக்காதே
அவ்வாருநினைத்தால் உன் அருகில்
இருப்பவைகூட தூரம்தான்,
இருபக்கம் இருந்தால்தான்
நாணையத்திற்கு மதிப்பு -அதுபோல்
நீ கோழையாய்
ஒருபக்க நாணையமாய்
இல்லாமல் வீரனாய்
இருபக்க நாணையமாய் மாறு,
ஓயாமல் (அயராது) முயர்ச்சிப்பவனுக்கு
மட்டுமே வெற்றி கிட்டும் .........
==========================================
பிழை இருந்தாலும் தவறுகள் இருந்தாலும்
உங்கள் கருத்துக்களை தயங்காமல் தெரிவிக்கவும்
அடியேன் அதை திருத்திக்கொள்கிறேன்.
==========================================
என்றும் அன்புடன்
சேர்ந்தைபாபு.த
உறங்கிய ஜீவன்
விழியோரம் வழியும்
துளிநீரும் சொல்கிறது
என் சோகம் என்னவென்று,
என் கண்ணீர் துளிகளை
அணைகட்டி அதில் துள்ளி
குதித்து நீராடுகிறாய் -என்
சோகம் என்னவென்று தெரியாமல்,
நான் காற்றாக வர ஆசைதான்
உன் சுவாச மூச்சாக
இருப்பேன் என்பதற்காக,
காதல் என்னும் கல்வெட்டில்
உன் நினைவால் இன்று -என்பெயரும்
பொறிக்கப்பட்டுள்ளது,
பெண்ணே! நேசிக்க நேரம் கிடைத்த
உனக்கு சிறிது யோசிக்க நேரம்
இல்லாமல் போனதோ!
உனக்காக உயிரையும் கொடுப்பேன்
என்பதற்காக- என் உயிரையும் எடுத்துவிட்டாய்
உன் பொய்யான காதலை சொல்லி,
அடுத்த பிறவி இருந்தால்
தினம்தினம் வீர மரணம் அடையவேண்டும்
உன் விரல் நிகமக பிறந்து
உன் இதழ்களில் சிக்கி ....
காதல் கைதியாய் என்னை சிறைபிடித்து
அதில் ஆயுள் கைதியாய் என்னை
இட்டு வைத்தாய் ,
நான் இறந்து விட்டேன்
என்று தெரியுமோ?
இன்று என் கல்லறையில்
பூக்கப்பட்ட பூக்களாய்
பிறந்துள்ளேன்,
இன்று உன்தோலில் கிடக்கிறேன்
மணமாலையாய் .....
நீ ஆனந்தத்தில் சிந்தும்
கண்ணீர் துளிகள் கூட
என்மீது விழுகிறது ,
ஒவ்வொரு துளியும் சொல்கிறது
எனது ஏமாற்றத்தை......
என் ஜீவன் கேட்கிறது
எனக்காக ஒருதுளி கண்ணீர்
சிந்து என் ஆன்மா சாந்தி அடையும்,
என்னையும் மறந்து இன்னும்
உறங்குகிறேன் உன் நினைவோடு
அந்த கல்லறையில்...
உறங்கிய ஜீவன்....
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு .த
நீ வருவாய் என
பறக்க நினைத்த
நான்....
சிறகில்லாமல்
தவிக்கிறேன்,
உதவ நினைத்த
நான்.....
கரங்கள் இல்லாமல்
கலங்குகிறேன்,
மிதக்க நினைத்த
நான்....
துடுப்பில்லாமல்
துடிக்கிறேன்,
பேச நினைத்த
நான்....
வார்த்தை வராமல்
தவிக்கிறேன்,
வர நினைத்த
நான்....
வழிதெரியாமல்
நிற்கிறேன்,
வாழ நினைத்த
நான்....(இன்று)
நீ இல்லாமல்
இருக்கிறேன்.....
உன் நினைவாளே பெண்ணே!
நீ வருவாய் என...........
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
அவர்களுக்கு பிடித்தது நான் கொடுத்த தேனீர் மட்டுமே
வானைக் கூரைகட்டி
வானிலவை விளக்காக்கி
விண்மீன்களை தோரணைகட்டி
காத்திருக்கும் கன்னியரின்
தவிப்பு இது !
ஆளா வெளஞ்சு நின்னு
ஆறேழு வருசமாச்சு
அத்த மகன் வருவானு -நெனப்ப
அள்ளித்தான் முடுஞ்சாசு ,
பருவம் வெளஞ்சு இருக்க
பாவிமகன் அறுவடைக்கு
வருவானோ!
என் தோழி
குழந்தை கண்டு
குமரி நான்
குமுறி அழுதேனே,
மாலையிட தோளுந்தான்
மசமசன்னு அரிக்குதையா
மஞ்சள் குங்குமமிட
நெற்றியுந்தான் விரும்புதையா,
பட்டினி விரதமிருந்து
பச்சைக்கிளி தவமிருந்தேன்
பட்டணத்து மாமன் மகன்
பச்சைக்கொடி காட்டுவாரோ!
ஏழை பெத்த புள்ள
ஏக்கந்தான் நெஞ்சுக்குள்ள
ஆசை மனசுக்குள்ள
அச்சாரம் போடுவாரோ!
கரிச்சட்டி வெலக்கி
கைரேகை தேஞ்சாச்சு
கருவேலம் விறகு சுமந்து
தலையுந்தான் வலுச்சாச்சு,
எண்ணெய் தேய்த்து
தலை வாரி
தலைமேல மலர் சூடி
கையிலதான் தேனீர் கொண்டு
குடித்தார் எல்லாம்
என்னை பிடிக்கும் என்று
நினைத்திருந்தேன் -பிடித்தது
நான் கொடுத்த தேனீர் மட்டுமே!
உன் வருகையை சுமந்து
வாசல் வந்து காத்திருக்கேன்
என்னை கண்ணகியாய் அழைக்கா விட்டாலும்
மாதவியாய் என்னை கூட்டிச் செல்லட ....
பருவ பெண்ணின் ஏக்கம் ....
===============================================================
இது என் கற்பனைக்கு எட்டியதை படைத்துள்ளேன்
தவறுகள் இருந்தால் கூறுங்கள் அடியேன் திருத்திக்கொள்கிறேன் ...
===============================================================
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
வானிலவை விளக்காக்கி
விண்மீன்களை தோரணைகட்டி
காத்திருக்கும் கன்னியரின்
தவிப்பு இது !
ஆளா வெளஞ்சு நின்னு
ஆறேழு வருசமாச்சு
அத்த மகன் வருவானு -நெனப்ப
அள்ளித்தான் முடுஞ்சாசு ,
பருவம் வெளஞ்சு இருக்க
பாவிமகன் அறுவடைக்கு
வருவானோ!
என் தோழி
குழந்தை கண்டு
குமரி நான்
குமுறி அழுதேனே,
மாலையிட தோளுந்தான்
மசமசன்னு அரிக்குதையா
மஞ்சள் குங்குமமிட
நெற்றியுந்தான் விரும்புதையா,
பட்டினி விரதமிருந்து
பச்சைக்கிளி தவமிருந்தேன்
பட்டணத்து மாமன் மகன்
பச்சைக்கொடி காட்டுவாரோ!
ஏழை பெத்த புள்ள
ஏக்கந்தான் நெஞ்சுக்குள்ள
ஆசை மனசுக்குள்ள
அச்சாரம் போடுவாரோ!
கரிச்சட்டி வெலக்கி
கைரேகை தேஞ்சாச்சு
கருவேலம் விறகு சுமந்து
தலையுந்தான் வலுச்சாச்சு,
எண்ணெய் தேய்த்து
தலை வாரி
தலைமேல மலர் சூடி
கையிலதான் தேனீர் கொண்டு
குடித்தார் எல்லாம்
என்னை பிடிக்கும் என்று
நினைத்திருந்தேன் -பிடித்தது
நான் கொடுத்த தேனீர் மட்டுமே!
உன் வருகையை சுமந்து
வாசல் வந்து காத்திருக்கேன்
என்னை கண்ணகியாய் அழைக்கா விட்டாலும்
மாதவியாய் என்னை கூட்டிச் செல்லட ....
பருவ பெண்ணின் ஏக்கம் ....
===============================================================
இது என் கற்பனைக்கு எட்டியதை படைத்துள்ளேன்
தவறுகள் இருந்தால் கூறுங்கள் அடியேன் திருத்திக்கொள்கிறேன் ...
===============================================================
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
Wednesday, 19 February 2014
குப்பைவண்டியில் பூக்கள்
வாடிய மொட்டுக்களை
கேள் ,
அதோ
அது வாழ்த்த
கதையைச் சொல்லும் ,
பசுஞ்செடியில்
குலுங்கிய
பூக்களாய்
இருந்த
எங்களை
கிள்ளி எடுத்து
விட்டார்கள்,
நானோ
அவளின்
கூந்தலில்,
என் சகோதரியோ
அவள் வீட்டு
பூஜை
அறையில்,
எனது
சகோதரனோ
அவளின்
மழலையின்
கையில்,
எங்கள்
மொத்த உயிரோ
அவளின் மாமியார்
கையில்,
வாடியதும்
தூக்கி எரிந்து
விட்டால்
அவள் வீட்டு
குப்பைக்கூடையில்
நான்,
வதங்கியதும்
அள்ளி கொட்டிவிட்டால்
அவள் வீட்டு
மொட்டை மாடியில்
என் சகோதரி,
குழந்தை மலம்
கழித்து விட்டான்
அவள் வீட்டார
சாக்கடையில்
என் சகோதரன்,
மாமியார்
பெயர்த்து
எரிந்து விட்டாள்
அப்பூக்கள் அல்லாத
செடியோ எங்கள்
உயிரோ
குப்பைவண்டியில் ...
போறோம்......வரமாட்டோம் ....
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
கேள் ,
அதோ
அது வாழ்த்த
கதையைச் சொல்லும் ,
பசுஞ்செடியில்
குலுங்கிய
பூக்களாய்
இருந்த
எங்களை
கிள்ளி எடுத்து
விட்டார்கள்,
நானோ
அவளின்
கூந்தலில்,
என் சகோதரியோ
அவள் வீட்டு
பூஜை
அறையில்,
எனது
சகோதரனோ
அவளின்
மழலையின்
கையில்,
எங்கள்
மொத்த உயிரோ
அவளின் மாமியார்
கையில்,
வாடியதும்
தூக்கி எரிந்து
விட்டால்
அவள் வீட்டு
குப்பைக்கூடையில்
நான்,
வதங்கியதும்
அள்ளி கொட்டிவிட்டால்
அவள் வீட்டு
மொட்டை மாடியில்
என் சகோதரி,
குழந்தை மலம்
கழித்து விட்டான்
அவள் வீட்டார
சாக்கடையில்
என் சகோதரன்,
மாமியார்
பெயர்த்து
எரிந்து விட்டாள்
அப்பூக்கள் அல்லாத
செடியோ எங்கள்
உயிரோ
குப்பைவண்டியில் ...
போறோம்......வரமாட்டோம் ....
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
அன்றும் இன்றும்
உதிரத்தை
சிந்தி
நமக்கு
சுதந்திரம்
வாங்கித்தந்த
நல் உள்ளங்களை
மறந்தோம்,
நாகரீகம்
உருவாகிய
நதிக்கரைகளை
எல்லாம்
சாக்கடை
ஆக்கினோம்,
விஞ்ஞானம்
என்ற பெயரில்
பல விந்தைகள்
புரிந்தோம்,
வித்தே
இல்லாத
பல பழங்களை
உண்கின்றோம் ,
ஆனால்
உண்ண
களி கிடைத்த
காலம்
போய்,
இன்று உயிர்
பிரியும்
கலிகாலம்
நம்
அருகாமையில் ....
என்றும் அன்புடன்
சேர்ந்தைபாபு.த
என்னை மூப்பாக்கி போனவளே!
http://eluthu.com/login/nanbarkal/Sernthai_Babu.html
அத்தியும்தான் பழுத்தாச்சு
அந்தியும்தான் பூத்தாச்சு
கொத்தித்திங்க பழம் இருக்க
குருவி நீ எங்க போனையடி!
மூணுரெண்டு வருசமாச்சு காதலிச்சு
மூப்புந்தா வந்து சேர்ந்தாச்சு
கறுத்த மச்சான் நானிருக்க
சொக்கத்தங்கம் நீ போனதெங்கே!
விவசாயி பெத்த மகன்
விருச்சம்ம வளர்ந்து நிக்க
உன்ன உன் தாய்மாமன் பொண்ணுகேக்க
நீ பொற்கிளியா பறந்தவளே!
நாள ஏழாள பெருக்கி
என் வயசுந்தான் போகுதடி
பாவிமக உன் நெனப்பால
பைத்தியமா ஆனேனடி!
அரசாங்க மாப்பிள்ள வேணுமுன்னு
உன் ஆத்தா அப்பன் சொன்னங்கன்னு
பாவி புள்ள என்னத்தான
பாதியில தூக்கி எருஞ்சவளே!
உனக்காக காத்திருந்து
காலமெல்லாம் போச்சுதடி
இன்று காலாவதி ஆனா என்ன
கண்டாரும் கேப்பாரோ!
என்ன நானும் சொல்ல
என்னவள் இருந்த நெஞ்ச
களையிழந்த மாடத்தில
காக்கா குருவி எச்சமிட!
சோகங்கள சொல்லி அழ
சொந்தமுனு யாருமில்ல
அன்னம் தண்ணி உண்ணாத
அடைக்கோழி நானானே!
சொல்ல சொல்ல சோகம்தான்
சொன்ன சோகம் பாதிதான்
பாதியில பாவிநான்
நான் இன்று நானில்லை உன்னாலே!
இன்றும் உன் நினைவுடன்
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
Friday, 24 January 2014
புள்ளினங்கள்
“புள்ளினங்கள்”
அட மானிடா! ,
நீ செய்த தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
வனங்களை நீ அழித்து விட்டு
வானுயர கோபுரம் கட்டி அதில்
மின்னணு சாதனங்களுடன்
மின்னலாய் நீ வசிக்கிறாய் !
நானோ மின்கம்பங்களில்
கூடு கட்டி சுட்டெரிக்கும்
வெயிலில் நான் வாடுகிறேன்,
இந்த பூமியை நீ அவகரித்து கொண்டாய்
இது எங்களுக்கும் சொந்தம்
என்பதை மறந்து விட்டாயோ ?
நாங்கள் வாய் பேச தெரியாத
உயிரினம் என்பதால் நீ கண்டு கொள்ளவில்லை
உன்னை கேட்க இவ்வுலகில் வேறு
யாரும் இல்லை என்ற ஆணவத்தால் ஆடுகிறாய்,
அழிவு எங்களுக்கு மட்டும் அல்ல
இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தான்
உன் வசதிக்காக தொலைத்தொடர்பு
கம்பங்கள் அமைத்தாய்,
கதிர் வீச்சு தாங்காமல்
காலாவதி ஆன பொருளாய்
இன்று மடிந்து கிடக்கிறோம்
சிட்டு குருவி இனமாய்,
மரக்கிளையில் கூடுகட்டி
மனம் மகிழ வாழ்ந்தோம்
நீயோ நாங்கள் இருந்த மரத்தை வெட்டி
உன் வீட்டு வாசல் கதவு செய்தாய்,
இன்று வீடே இல்லாமல் இருக்கிறோம்
சிந்தனை செய் மானிடா
இவ்வுலகம் எங்களுக்கும் சொந்தம் என்பதை..........
……….மரண போராட்டத்தில் வாழ்கிறோம்……….
அன்புடன் புள்ளினம்
சேர்ந்தை_பாபு.த
.......என் அம்மாவின் மடியில.....(1)
.......என் அம்மாவின் மடியில.....(1)
மண்சட்டி ஒன்நெடுத்து
உப்பு புளி ரெண்டும் இட்டு
சுட்டெடுத்த கத்தரிகாய
மத்து கொண்டு
நான் கடஞ்சு
மகனே நான் தர,
சட்டியில நெய் மணக்குதுன்னு
சாதம் போட்டு விரவி உண்ண
என் மகன் திண்ட சோறு
மீதம் கொஞ்சம் இருக்குதுன்னு
எச்சில் சோறையும்
அமுதமுனு உண்டவளே!
வாட காத்தடிக்க
போர்த்திக் கொள்ள
போர்வை இல்லை
ஆத்த உடுத்திய சேலையில
ஒண்டி நான் உறங்குறேனே!
கழனியில களை பறிக்க
கரட்டு மேட்டில
கருவேலம் மரத்துலதான்
தொட்டில் கட்டி போட்டவளே!
மன்னவன் தூங்குறானு
மடிமீது தாலாட்டி
தன் இரத்தத்த பாலாக்கி
என் பசி தீர்த்தவளே!
வட்டீல சோறு இல்லையின்னு
வயலில பதரெடுத்து வருத்தவளே
கைகுத்தி நெல்லரிசி
கஞ்சிதான் பொங்குனேயே!
பொட்டல் காட்டில் மழை அடிக்க
மகனே! நனையாதனு தன்
முந்தானைய குடையா
புடுச்சவளே!
கழனியில கதிரறுக்க
பதறு தூத்தயில
பாவிமகன் கண்ணுலதான்
தூசி விழுந்ததுன்னு
துடுச்சுதான் போனேயே!
தொடரும் ..........
என்றும் அன்புடன்
சே.பா
அனுபவம்
தோழா!
நீ தோள் கொடுப்பதால் தூணாகிறாய்!
நீ துவண்டு விடாதே,
நீ எதையும் எதிர் பார்க்காமல்
செய்கிறாய்,
எதிர்பார்பை நீ நினைத்தால்
உன் கடமையை மறந்து விடுகிறாய்,
கூண்டு கிளியாகஇல்லாமல்
சிறகடிக்கும் சிட்டு குருவியாக
நீ விண்ணில் பறந்துசெல்
இவ்வுலகத்தை நீ அறிவாய்,
உனது தோல்விகள்
உனக்கு கிடைக்கும்
வெற்றியின் மைல்கள்
என்பதை மறந்து விடாதே!
நீ ஒவ்வொரு முறையும்
முயற்சிக்கும் போது
உனக்குள் விதைக்கிறாய்
வெற்றியின் வித்துக்களை!
ஆசை!
உன் வாழ்க்கைக்கு
வரையப்பட்ட வரைபடம்
அதில் உன் தகுதிக்கு
தகுந்தாற்போல்
உன் தேவைகளை தேடிக்கொள்!
ஆனால் பேராசை படாதே
அது உன்னை அழித்து விடும்.
அனுபவம்............
என்றும் அன்புடன்
சேர்ந்தை_பாபு.த
..........கல்வி..........
கல்வி
உயர்ந்த சிந்தனைகள்
உன்னை நல்வழியில்
நடத்திச்செல்லும்,
நீ கற்ற கல்வி
இந்த உலகம் அழியும்
வரை அழியாது,
மற்றவர்களின்
உணர்வுகளை மதித்தால் தான்
நீ மனிதன்,
உறங்கும் முன் நீ
ஒருவரி எழுது, நீ உறங்கிய பின்
விழிப்பாய் என்பது
சாத்தியம் அல்ல,
நீ எழுதிய வரிகள்தான்
நாளைய சரித்திர வரலாறு
என்பதை மறந்து விடாதே!
நீ உன் நம்பிக்கையை
இழக்கும் போது துரும்பு கூட
தூணாகும்,
காற்று புகாத இடத்திலும்
நீ கற்ற கல்வி புகுந்துவிடும்
அந்த விண்ணிலும் கூட.
நினைப்பதை நேர்த்தியுடம்
செய்தால் உன் நிகழ்காலம்
சொர்க்கம் ஆகும்,
மறு பிறவி எடுப்போம்
என்று இந்த மானிட பிறவியை
தொலைத்து விடாதே!
என்றும் அன்புடன்
.......சே.பா........
நீரிலும் நிலத்திலும்
தவளை
(நீர்)
உன்னில் வாழும் வரை
சுதந்திரம் தான் ஆனால்
உன்னை பிரிந்து வந்தால்
சோதனையும் வேதனையும் தான்,
மானிட பிறவிகள் என்னை
மன்றி இட்டு பிடிக்கும் பொதும்
வயல் வெளியில் செந்நாரை வாயில்
நான் மாட்டிக்கொள்ளும் போதும்,
நீரிலும் நிலத்திலும் வாழ
பழகிக்கொண்ட நான்
இவ்வளவு வேதனைகள் அடைகிறேன்,
நீரில் நான் வாழும் போது
பாறை இடுக்கில் பதுங்கி கொள்வேன்
பாசி மீங்களை பசிக்கு தின்பேன்
உண்ண உணவும் வாழ்வு தந்த
உன்னை விட்டு பிரிகிறேன்,
கொக்கின் வாயில் அகப்பட்ட
தவளை நான்......
என்றும் அன்புடன்
.......சே. பா.......
என் தேசத்து காவல்காரன்
அரசு வேலை தான்
ஆயிரம் மைல்கல் கடந்து
இன்று எல்லையோரம் நிற்கிறோம் தூக்கம் கடந்து,
ஈன்று எடுத்த அன்னையை விட்டு
உறவுகளை பிரிந்தும் இன்று
ஊக்கத்தோடு இருக்கிறோம்,
என் தாய் நாட்டிற்காக ஆயுதம்
ஏந்திய என் கரங்கள் என்றும்
ஐயம் கொள்வதில்லை
ஒருவன் அல்ல நாங்கள் இங்கு
ஓராயிரம்பேர் போராடுகிறோம் (இன்று)
ஒளவ்வையும் இருந்திருந்தால் எங்களுக்கும்
(ஓர் ஆத்திச்சூடி எழுதி இருப்பாள்)
அஃது நான் எழுதும் எழுத்தல்ல
எனது உணர்வுகள்
எல்லையோரம் நான்....
என்றும் அன்புடன்
சே.பா
முடிவில்லாத நாளை
"முடிவில்லாத நாளை"
எல்லை இல்லா வானம் கூட உன் வசம்
நீ உன்னை அறியும் போது
நீ தேடி பார்க்கும் போது கிடைப்பதில்லை
உனது வெற்றிகள்,
நீ தொலைக்கபட்ட இடத்தில் தேடு
உன் நிம்மதியை,
நீ கடக்கப்பட்ட கற்கள் கூட உன் பின்னால்
மைல் கல்லாய் நிற்கிறது,
நீ கடந்து சென்ற காலங்களில்
என்ன செய்தாய்,
நீ தொலை வானத்தை தோழன் என்று என்னி
நீ தொட துணிந்தால் அது தூரம்தான்,
நாளை என்பது முடிவில்லை என்பதை
நீ அறிந்தால் உன் கடமையை
நீ இன்றே செய்து முடிப்பாய்,
என்றும் அன்புடன்
சே.பா
உன்னால் முடியும்
மற்றம் வேண்டும் என்றும் நிரந்தரதிர்கக
நிகழ்வுகள் நிழல்கலனால் நிஜங்களை என்ன சொல்வது
நேந்து வைத்த நேத்திகடன்- தீர்க்க
நெய் விளக்கை ஏற்றுகிறேன்
நிம்மதி வேண்டும் என்று
நிழல்களை தேடி ஓய்வு எடுத்தேன்-இன்று
நிரந்தரம் என்று என்னி
நிம்மதியை தொலைத்தோமட
ஆத்திரம் அடைந்தால் -அங்கு
கோபம் விளைகிறது
அமைதியை கடைபிடித்தல்
அகிலமும் உன்கைல்
ஆணவம் கொள்ளும் போது
ஆவேசம் கொள்கிறாய்
இன்று உன் இடம் எதுவென்று
தெரிந்துகொள்
நாளைய சரித்திரத்திற்கு -உன்னை
நீ ஆயத்த படுத்திகொள்
என்ன இந்த வழக்கை
என்று விரக்திகொல்ல வேண்டாம்
என்றும் உன் முயற்சிகளுக்கு
உந்துகோளாய் இரு -உன்
வாழ்நாளில் வெற்றிக்கனிகளை
பரிதுக்கொண்டே இருக்கலாம் ...
என்று வெற்றியாளன் .............
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
______நிலா ______
ஆசைகளை பூட்டி வைத்தால்
ஆனந்தத்தில் கண்ணீர் வரும்
சோகங்களை பூட்டிவைதால்
இதயமல்லவா கண்ணீர் வடிக்கும்.
எத்தனை நாட்களாய் திட்டமிட்டாய்
இந்த விண்மீன் கூடங்களை
வலை வீசி பிடிப்பதற்கு,
பாச கயிறு போட்டு
அந்த பால் நிலவை
கட்டி இழுக்கிறேன்
15 நாட்களாக!
இன்று காணவில்லை!
அன்றைய பொழுது அம்மாவசை
என்று தெரியாமல்....
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
என் நினைவலை
ஆராத இரனங்களால் நான்
அவதி படுகிறேன்
உன் நினைவுகளால்,
ஆறுதல் கூற யாரும் இல்லை என்றாய்
அசாகரியமன சவால்களை
எவ்வாறு எதிர்கொள்ள போய்கிறாய்,
ஊமை கண்ட கணவாய் போனதோ
என் காதல்!
உனக்காக காத்திருக்கிறேன் காலமெல்லாம்
நீ எனக்காக என்றால்,
அழியாத சுவடுகளை தந்துவிட்ட
உன் நினைவுகள் -இன்று
நிம்மதி உறக்கம் இல்லாமல் அலைகிறது,
கொடூர பயணம் தான் என் காதல்
அதில் பலியாவது நானல்லவா,
பெண்ணின் மனதை தொட்டால்
போதும் என்று நினைத்தேன்-ஆனால்
பின்னர் தெரிந்தது எவ்வளவு ஆழம்
என்று தெரியாமல் புதைந்தேன்-பெண்ணே!
என்னை ஏற்றும் ஏற்காதது போல்
பாசாங்கு காட்டுகிறாய் எதற்காக?
என்னை காலம் எல்லாம் கலங்கடிக்கவா.
என்னையும் உன் நினைவையும்
சுமக்கும் என் நினைவலை............
என்றுன் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
உன்னிடம் வந்து சேர
ஓரவிழி பார்வையிலே
நான் ஒதுங்கி கிடக்கிறேன்
கண்ணில் விழுந்த தூசாக,
நேசிக்க இடம் கொடுத்த
உன் மனசை களவாடி செல்ல
இந்த கயவந்தான் வருவானோ ,
காத்திருந்து காத்திருந்து கனவு வருமென்று
நான் விழித்தேதான் இருந்தேனடி
உன் நினைவாலே!
நீ கூப்பிட்டால் போதும் மாமா
நான் துள்ளி குதித்து வருவேன்
என்றாய்,
நான் கூபிடமல் வந்து விட்டாய்
என் வீட்டு ஜன்னல் ஒர
நிலவாக!
உன்னுட வழ சேர்த்து வைத்த
ஆசைகள் ஓராயிரம்,
நீ ஆசைப்பட்டதை நிறைவேற்றுவேன்
என் ஆயுள் முழுதும் நீ கூட வர வேண்டும்
இதுவே என் ஆசை!
என்னதான் சொல்வதென்று தெரிய வில்லை
இன்று உன்னை பிரிந்து இருக்கும்
இந்த பொழுதை ,
காலம் வரும் வரை காத்திருப்பேன்
அன்று நீ வருவாய் என்று ,
நினையுகளுடன் நீந்தி செல்கிறேன்
அந்த அடிவானத்தை தொட
அது தூரம் இல்லை
நீ என்னுடன் இருக்கும் வரை
வற்றாத ஜீவநதியும் வற்றி விடும்
என் சோகத்தை சொன்னால்
என் கண்ணீர் துளிகளில் உன்
நினைவு என்னும் தெப்பத்தில்
பயணிக்கிறேன்.
உன்னிடம் வந்து சேர..............
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
நான் ஒதுங்கி கிடக்கிறேன்
கண்ணில் விழுந்த தூசாக,
நேசிக்க இடம் கொடுத்த
உன் மனசை களவாடி செல்ல
இந்த கயவந்தான் வருவானோ ,
காத்திருந்து காத்திருந்து கனவு வருமென்று
நான் விழித்தேதான் இருந்தேனடி
உன் நினைவாலே!
நீ கூப்பிட்டால் போதும் மாமா
நான் துள்ளி குதித்து வருவேன்
என்றாய்,
நான் கூபிடமல் வந்து விட்டாய்
என் வீட்டு ஜன்னல் ஒர
நிலவாக!
உன்னுட வழ சேர்த்து வைத்த
ஆசைகள் ஓராயிரம்,
நீ ஆசைப்பட்டதை நிறைவேற்றுவேன்
என் ஆயுள் முழுதும் நீ கூட வர வேண்டும்
இதுவே என் ஆசை!
என்னதான் சொல்வதென்று தெரிய வில்லை
இன்று உன்னை பிரிந்து இருக்கும்
இந்த பொழுதை ,
காலம் வரும் வரை காத்திருப்பேன்
அன்று நீ வருவாய் என்று ,
நினையுகளுடன் நீந்தி செல்கிறேன்
அந்த அடிவானத்தை தொட
அது தூரம் இல்லை
நீ என்னுடன் இருக்கும் வரை
வற்றாத ஜீவநதியும் வற்றி விடும்
என் சோகத்தை சொன்னால்
என் கண்ணீர் துளிகளில் உன்
நினைவு என்னும் தெப்பத்தில்
பயணிக்கிறேன்.
உன்னிடம் வந்து சேர..............
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
குண்டுகளுக்கு இறையான ஈழம்
என்னடா பாவம் செய்தோம்,
தமிழனாய் பிறந்தது தவறா?
தாய் மண்ணின் மக்களாய்(பிள்ளை) அன்று,
அனால் கூண்டுகிளியாக இன்று
கூர் முனை குண்டுகள்
குத்தி கிழித்த நெஞ்சுகளை பார்,
ரணங்களில் துடிக்கும்
தளிர்களை பார்,
மானபங்கம் படுத்தப்பட்ட
மங்கையரை பார்
மரணத்தின் விளிம்பில்
அவல ஓலங்களை பார்,
குண்டுகள் குவித்த பிணக்
குவியளைப்பார்
என்னடா!
மானிட பிறவி,
மானிடர் மத்தியில்
வேற்றுமை கண்டது எவனோ ?
பார்ப்பவர் கண்கள் கண்ணீரில் அல்ல
ஈழத்தின் அவல நிலையை
எடுத்துறைக்கு மொழியாட அது,
வீசப்பட்ட குண்டுகளுக்கு
இறையானது ஈழம்....
தீராத துயரத்தில் .....
என்றும் அன்புடன்
சே. பா
மழை
மழை பெய்யும் நேரம்
இடி மேளதாளம் போடும்,
சாரல் வீசும் நேரம்
என் வீட்டு சன்னல் ஓரம் நானும்,
மேற்கூரை மழைநீர் வடிகிறதே
கைநீட்ட நீரோ சிதர்கிறதோ!
துளிநீரில் பள்ளம் நிறைய
அதில் துள்ளி நானும் குதிக்க,
மொட்டை மாடியில்!
உலர்ந்த துணியும் நனைகிறதே,
சட்டை பையிலும்
குறிப்பேடும் கசங்கிதான் போனதே!
ஆசைகள் நூறு (முற்றத்தில்)
மழைநீரை பாரு
அதில் துள்ளி குதிக்கும் போது
என் ஆயிலும் நூறு!
பொக்கிஷம் இந்த பூமி
இதில் என்ன குறை நீ காமி
பொய்த்து விட்ட மேகம் (இதற்க்கு)
காரணம் நீதான் பாவம்
என்றும் அன்புடன்
சே.பா
குறை ஒன்றும் இல்லை
எழுதாத காவியம் இவர்களின் கனவு
படைக்கத ஓவியம்
விழி இழந்தோரின் பார்வை
எட்டாத சிகரம்
கால் இழந்தோரின் நடை
கேட்காத தேனிசை
செவி இழந்தோரின் கேள்திரன்
ரசிக்காத பாடல்
ஊமையின் உளறல்
இவை அதனையும்
முறியடித்து விட்டன
இவர்களின் சாதனையால்
ஊனம் ஒரு குறையில்லை
பார்பவர்கள் பாவம்
என்று சொல்லாமல்
நீ சாதனையாளன்
என்று சொல்லுங்கள்
உங்களால் முடியாததை கூட
நிகழ்த்தி காட்டுவார்கள்
குறை பார்பவரின் கண்களில்தான்!
இவனும் சதையாளன்........
என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த
Subscribe to:
Posts (Atom)






















