உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 18 October 2013

“நினைவுகளுடன்”


பொய்களாய் சித்தறிக்கிறேன்         
அதில் அழகு ஒளிந்திருப்பதால்>       
உன்னை வர்ணிக்க                    
வார்த்தைகள் தேடுகிறேன்            
இருக்கும் உயிர்மெய்                  
எழுத்துகள் பற்றவில்லை>             
மஞ்சள் வெயில்கொண்டு              
மாலை கட்ட ஆசை                    
உன்னை மனம் மணக்க>                                    
ஏனடி பெண்ணே!
இதய சுவர்களுக்கு சாயம் பூசுகிறாய்
கவலையின் நிறமாய் இரத்தத்தில்>
என் வாழ்க்கைக்கு
புது யுகம் தந்தவள் நீ!
தாய் மரணத்திற்கு கூட
கண்ணீர் சிந்தாதவன்
உன் பிரிவு தாங்காமல்
மரணிக்க துணிந்துவிட்டான்
சோக மழைக்குள் சிக்கி தவிக்கிறேன்
ஆனந்தமான வாழ்க்கைக்கு
அஸ்திவாரம் நீ இடுவாய்
பகல் பொழுது நெடுந்தூரமாய்
இரவு பொழுது சிறுகணமாய்
அமைந்தது ஏனோ
என்னவளே!
என் உணர்வுகளை
புரிந்து கொண்டு  
புது வாழ்வுக்கு வித்திடுவாயோ!
                   என்றும் உன் நினைவுகளுடன்.

                         சேர்ந்தை---பாபு.த

No comments: