உங்கள் கருத்துகள்

இந்த வலையதளத்தில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.பிறர் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்க கூடாது நிபந்தனைக்கு உட்பட்டது.

என்னைப்பற்றி

Friday, 24 January 2014

புள்ளினங்கள்


“புள்ளினங்கள்” 

அட மானிடா!  ,
நீ செய்த தவறுக்கு 
நாங்கள்  பலியாவதா?

வனங்களை நீ அழித்து விட்டு 

வானுயர கோபுரம் கட்டி அதில்
மின்னணு சாதனங்களுடன் 
மின்னலாய்  நீ வசிக்கிறாய் !

நானோ மின்கம்பங்களில் 

கூடு கட்டி சுட்டெரிக்கும் 
வெயிலில் நான் வாடுகிறேன்,

இந்த பூமியை நீ அவகரித்து கொண்டாய் 
இது எங்களுக்கும் சொந்தம் 
என்பதை மறந்து விட்டாயோ ?

நாங்கள் வாய் பேச தெரியாத 

உயிரினம் என்பதால் நீ கண்டு கொள்ளவில்லை  
உன்னை கேட்க இவ்வுலகில் வேறு 
யாரும் இல்லை என்ற ஆணவத்தால் ஆடுகிறாய்,

அழிவு எங்களுக்கு மட்டும் அல்ல 

இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தான் 
உன் வசதிக்காக தொலைத்தொடர்பு 
கம்பங்கள் அமைத்தாய்,
  
கதிர் வீச்சு தாங்காமல் 
காலாவதி ஆன பொருளாய் 
இன்று மடிந்து கிடக்கிறோம்
சிட்டு குருவி இனமாய்,

மரக்கிளையில் கூடுகட்டி 

மனம் மகிழ வாழ்ந்தோம் 
நீயோ நாங்கள் இருந்த மரத்தை வெட்டி
உன் வீட்டு வாசல் கதவு செய்தாய்,

இன்று வீடே  இல்லாமல்  இருக்கிறோம்

சிந்தனை செய் மானிடா 
இவ்வுலகம் எங்களுக்கும் சொந்தம் என்பதை..........

……….மரண போராட்டத்தில் வாழ்கிறோம்………. 

                அன்புடன் புள்ளினம்
                           சேர்ந்தை_பாபு.த

No comments: